Share on Social Media


ஆந்திராவில் 2019-ல் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக 3-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து அனைவரது மனதிலும் இடம் பிடித்து வரும் ஜெகன்மோகன் தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டி வருகிறார்.

ஆட்சிக்கு வந்த 2 வருடத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் 94.5 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். வெறும் வாய்ப் பேச்சோடு மட்டும் நிறுத்தி விடாமல் அளித்த வாக்குறுதிகள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என அனைத்தையும் பட்டியலிட்டு மக்கள் கையில் ஆவணமாக வழங்கியிருக்கிறார்.

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியல்

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியல்

முதல்வராக 2 ஆண்டுகள் நிறைவுசெய்திருக்கும் அவர், ஒய்.எஸ்.ஆர் ரைத்து பரோசா (YSR Rythu Bharosa), ஆரோக்யஸ்ரி (Aarogyasri), ஜலாயக்னம் (Jalayagnam), அம்மா வோடி (Amma Vodi), ஒய்.எஸ்.ஆர் ஆசாரா (YSR Aasara), சேயுதா திட்டம் (Cheyutha Scheme) எனத் தேர்தல் அறிக்கையின் முக்கிய திட்டங்களை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படும் ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டத்தினையும் ஜெகன்மோகன் நேற்று தொடக்கி வைத்திருக்கிறார்.

`ஒய்.எஸ்.ஆர் ஜெகன் அண்ணா காலனி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வீட்டுவசதி திட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டமாக, 28,084 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,60,227 வீடுகளும், இரண்டாம் கட்டமாக 22,860 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12,70,000 வீடுகளும் கட்டி முடிக்கப்பட இருக்கின்றன. முதலில், மாநிலம் முழுதும் சொந்த வீடில்லாமல் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் ஏழை எளிய குடும்பங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகக் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவச நில பட்டா வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது பிரதமரின் ‘ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மாநில அரசின் சார்பிலேயே மானியம் பெறப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *