Share on Social Media


புதுச்சேரி : புதுச்சேரியில் மழை நிவாரணமாக சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ. 5,000, மஞ்சள் கார்டுக்கு ரூ. 4,500 வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.புதுச்சேரியில் அக்டோபர் 26ல் வடகிழக்கு பருவமழை துவங்கியது.

அன்று முதல் விட்டு விட்டு கன மழை பெய்தது. சில நாட்கள் வரலாறு காணாத அளவில் மழை கொட்டி தீர்த்தது. மழையால் புதுச்சேரியே வெள்ளக் காடாக மாறியது. மழை வெள்ளத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இதனால், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மழை நிவாரணமாக ரூ. 5,000 வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி நவம்பர் 16ல் அறிவித்தார்.நிவாரண தொகை வழங்க நிதி ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

நிதி ஒப்புதல் கிடைப்பதற்கு முன்னதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை, சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்களும் தொடர்ந்து பணியாற்றி, பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்கான ஏற்பாட்டை செய்து வந்தது.நிவாரணம் வழங்குவதற்கான நிதி ஒப்புதல் நேற்று முன்தினம் கிடைத்தது. இதில் மஞ்சள் ரேஷன் கார்டுக்கான நிவாரண தொகையில், ரூ. 500 குறைத்து அனுமதி கிடைத்தது.அதைத் தொடர்ந்து, உடனடியாக நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி பயனாளிகளுக்கு மழை நிவாரண தொகையை வழங்கி துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ., ரமேஷ், குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் சக்திவேல் உடனிருந்தனர். புதுச்சேரியில் மொத்தம் 3.44 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், அரசு ஊழியர்களின் 17 ஆயிரம் கார்டுகளுக்கு நிவாரண தொகை வழங்குவதில் இருந்து நீக்கப்பட்டது. மீதமுள்ள 1 லட்சத்து 85 ஆயிரம் சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 5,000 ரூபாயும், 1 லட்சத்து 42 ஆயிரம் மஞ்சள் கார்டுகளுக்கு 4,500 ரூபாயும் நிவாரணமாக குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் நேற்று முதல் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 3.27 லட்சம் கார்டுதாரர்கள் இதன் மூலம் பயனடைவர். இதற்காக அரசுக்கு ரூ. 156 கோடி செலவாகிறது. வங்கியில் பணம்:குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில்,’மழை நிவாரண தொகை ஒரே நாளில் அனைவருக்கும் அனுப்பட்டு விட்டது. வங்கி கணக்குடன் ஆதார் இணைத்து பராமரிக்கப்படும் வங்கி கணக்கில் பணம் சென்று விடும்.ஆதார் இணைக்காமல் இருப்பது, வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பது உள்ளிட்டவர்களுக்கு பணம் செல்வதில் சிக்கல் இருக்கும். ஒரிரு நாட்களில் எத்தனை பேருக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது என்ற விபரத்தை, வங்கிகள் குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு சமர்ப்பிக்கும்.அதன்பின்பு, குடிமைப்பொருள் வழங்கல் இணைய தளத்தில் யாருடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியிடப்படும்’ என்றனர்.ஏ.டி.எம்.,கள் காலி:ஒரே நேரத்தில் புதுச்சேரியில் உள்ள 3.27 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மழை நிவாரண தொகையாக ரூ. 156 கோடி செலுத்தப்பட்டது. இதனால், வங்கியில் செலுத்தப்பட்ட பணத்தை எடுப்பதற்காக ஏராளமானவர்கள் ஏ.டி.எம்.,களில் குவிந்தனர். ஆனால் பல ஏ.டி.எம்., களில் பணம் இல்லாததால், பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்தனர்.தயாராகிறதுபொங்கல் பரிசுஇது குறித்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில், ‘மழை நிவாரணம் அறிவிக்கப்பட்டபடி, சிவப்பு கார்டுகளுக்கு ரூ. 5,000, மஞ்சள் கார்டுகளுக்கு ரூ. 4,500 மழை நிவாரண தொகை வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) முதல் அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.பொங்கல் பரிசு கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அதுபோல், பொங்கல் பண்டிக்கைக்கு பணமாக கொடுக்காமல், அமுதசுரபி மூலம் துணியாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.கொரோனா விதிமுறைகள் பின்பற்றி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்கும்’ என்றார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.