Share on Social Media


மும்பை:மஹாராஷ்டிராவில், தன் மீது அவதுாறு பரப்பியதற்காக, 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி, தேவேந்திர பட்னவிசுக்கு மாநில அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அமைச்சரும், தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் மற்றும் முன்னாள் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கிடையே, நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான், கடந்த ஜனவரி 13ம் தேதி, போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் சிறையில் அடைக்கப்பட்ட சமீர் கான், எட்டு மாதங்களுக்கு பின், கடந்த செப்டம்பர் 27ம் தேதி ஜாமினில் வெளியே வந்தார்.

இதையடுத்து, போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதாக, சமீர் கான் மீது தேவேந்திர பட்னவிஸ் குற்றம் சாட்டினார். இந்நிலையில் தன் மீது அவதுாறு பரப்பியதற்காக, இழப்பீடாக 5 கோடி ரூபாய் அளிக்கக்கோரி, பட்னவிசுக்கு சமீர் கான் நேற்று நோட்டீஸ் அனுப்பினார்.இந்த நோட்டீசை, நவாப் மாலிக், அவரது மகள் நிலோபர் மாலிக் கான் இருவரும், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த நோட்டீசில், பட்னவிஸ் கூறியது முற்றிலும் பொய் என்றும், அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *