Share on Social Media


கோவை: நீலிக்கோணாம்பாளையம் கடவு எண்: 5ல், ஐந்தாண்டுகளாக ரயில்வே பாலம் அந்தரத்தில் நிற்கிறது. காத்திருககும் வாகன ஓட்டிகளுக்கான பிரச்னை தீர்க்க, 3 கோடி ரூபாயில் சுரங்க பாதை (சப்வே) அமைக்கப்படுகிறது.
ரயில்வே தண்டவாளத்தை கட்ட, வழக்கமாக பாலங்கள் கட்டும்போது, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அணுகு பாலங்கள் விரைவில் கட்டப்பட்டு விடும். ரயில்வே சார்பில் தண்டவாளத்தின் மேல் கட்டப்படும் இணைப்பு பாலம் கட்டுவதற்கு ஆண்டுக்கணக்கில் தாமதமாகும்.தற்போது, ரயில்வே சார்பில் இணைப்பு பாலம் முதலில் கட்டப்படுவதும், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் அணுகுபாலம் கட்டுவதில் தாமதமாவதும் தொடர்கதையாக நடக்கிறது.
உதாரணத்துக்கு, நீலிக்கோணாம்பாளையத்தில் (கடவு எண்: 5) ஐந்தாண்டுகளுக்கு மேலாக இணைப்பு பாலம் அந்தரத்தில் நிற்பதை காணலாம். அணுகுபாலம் கட்டுமான பணி இதுவரை துவங்கப்படாத நிலையில், கடவு எண்: 5ல், ‘சப்வே’ அமைக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது, ‘பீக் ஹவர்ஸில்’ காத்திருப்பதற்கு விமோசனம் தருவதால், அப்பகுதியினருக்கு நிம்மதியை தந்துள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:நீலிக்கோணாம்பாளையத்தில் கடவு எண்: 5ல் இணைப்பு பாலம் கட்டி பல ஆண்டுகளாகிறது. அணுகுபாலம் கட்டப்படாததால், ரயில்கள் வரும் சமயத்தில், ‘கேட்’டில் வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், ஆம்புலன்ஸ் கடப்பதற்கு சிரமம் ஏற்படுவதாக புலம்பல்கள் எழுகின்றன. இச்சூழலில், சிரமத்தை தவிர்க்க, கடவு எண்: 5ல் ‘சப்வே’ அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தின் கீழ், 4.5 மீட்டர் நீளம், 2.75 மீட்டர் உயரத்தில், 3 கோடி ரூபாயில் ‘சப்வே’ அமைகிறது. ‘கான்கிரீட் பிளாக்’ நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *