Share on Social Media


நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் நோய்களைப் பரப்பும் தன்மையைக் கொண்ட 78 வகையான கிருமிகள் இருக்கின்றன என்று கூறும் ஆய்வறிஞர்கள், நம் வீட்டு கழிவறைகளில் இருக்கும் கிருமிகளைவிட பலமடங்கு அதிகமான கிருமிகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் குடியிருக்கின்றன என்றும் கூறுகிறார்கள். அதனால் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தியப் பின் சோப்பு போட்டுக் கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், புற ஊதாக் கதிர்கள் மூலம், ரூபாய் நோட்டுகளின் மீதுள்ள கிருமிகளை அழிக்கலாம் என்று கூறும் விஞ்ஞானிகள் அதை எளிமையான முறையில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 ரூபாய் நோட்டுகள்

ரூபாய் நோட்டுகள்

இந்நிலையில், புற ஊதாக் கதிர்களின் மூலம் எளிமையான முறையில் இதற்கான தீர்வை முன்வைக்கிறார் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்திருக்கும் குப்பநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சத்யா. புற ஊதாக் கதிர்களின் பல்புகளின் மூலம் ரூபாய் நோட்டுகளில் படிந்திருக்கும் கிருமிகளை 7 விநாடிகளில் அழிக்க முடியும் என்று கூறும் மாணவி சத்யா, இந்தச் சாதனம் மனித உடலில் நேரடியாகப் படாதவாறு வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார். தொடர்ந்து நம்மிடம் பேசிய மாணவி சத்யா, “நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் பல்வேறு விதமான கிருமிகள் இருக்கின்றன. ஆனால், அதுகுறித்த அறியாமல் இருக்கும் நாம், இன்னும் நாக்கில் எச்சில் தொட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *