Share on Social Media

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பின்னர் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கியிருக்கிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கயிருக்கும் நிலையில் இப்போது ரிஷப் பன்ட் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்.

இந்திய அணி வரும் ஜூலை 20 முதல் கவுன்ட்டி அணியுடன் மூன்று நாள் பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணியினர் மீண்டும் பயோபபுளில் இணைந்த நிலையில்தான் ரிஷப் பன்ட்டுக்கு கொரோனா என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.

ரிஷப் பன்ட்டுக்கு 8 நாட்களுக்கு முன்னரே கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் ஒரு வாரமாக தனிமையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரோடு தொடர்பில் இருந்த மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அணிக்குள் இணைந்துவிட்டனர் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது.

ரிஷப் பன்ட்

Also Read: இலங்கை கிரிக்கெட்டுக்கு கம்பெனி கொடுக்கும் தென்னாப்பிரிக்கா… முதல்முறையாக அயர்லாந்திடம் தோல்வி!

துர்ஹாமில் 20-ம் தேதி தொடங்கயிருக்கும் பயிற்சிபோட்டியில் ரிஷப் பன்ட் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. ரிஷப் பன்ட்டுக்கு எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லாததால் அவர் இன்னும் ஒரு வாரத்துக்குள் உடல்நலம் தேறி அணிக்குள் இணைந்துவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இன்னொருபக்கம் ரிஷப் பன்ட்டுக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் இங்கிலாந்து போவார் என்கிற வதந்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததுமே இந்திய வீரர்களை பயோபபுளில் இருந்து விடுவிடுத்து ஜூலை 15-ம் தேதிக்குள் மீண்டும் பயோ பபுளில் இணையவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது பிசிசிஐ. ஆனால், இந்திய வீரர்கள் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள், விம்பிள்டன் போட்டிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குப் போனதால் பிசிசிஐ எச்சரிக்கை கடிதமும் அனுப்பியது. இந்த சூழலில்தான் ரிஷப் பன்ட்டுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *