Share on Social Media

இதில் யார் மீது தவறென சொல்ல முடியும்? கம்யூனிகேஷன் கேப் எனச் சொல்லலாம். ரமேஷ் சித்துவிடம் நேராகப் பேசியிருக்கலாம் எனச் சொல்லலாம். இன்னும் பல `இதைச் செய்திருக்கலாம்’ எனச் சொல்லலாம். ஆனால், நிகழும்போது நம்மால் அவ்வளவு துல்லியமாக யோசித்து செயல்பட முடியாது என்பதே யதார்த்தம்.

ரிலேஷன்ஷிப்

ரிலேஷன்ஷிப்
Pixabay

ரம்யா – ரமேஷுக்குப் பதில், கீதா – கிருஷ்ணன் என இன்னொரு கதை எடுத்தால் அங்கே சித்துவுக்குப் பதில் கீதாவின் தோழி சித்தாரா என ஒருத்தரால் சிக்கல் வந்திருக்கலாம். ஆணோ, பெண்ணோ தன் இணை மீதான கவனம் குறைந்து இன்னொருத்தர் மேல் கவனம் அதிகம் சென்றால் அது நிச்சயம் ரிலேஷன்ஷிப்புக்குப் பிரச்னைதான். அதுவும் அந்த நண்பர் பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டி என்பது போல நெருக்கமான ஆளாக இருந்தால் அவ்வளவுதான். இதைச் சமாளிக்க அதீத பக்குவம் தேவை. தன் இணையிடம் அந்த நண்பர் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். தன் பார்ட்னருக்கு அதில் ஏதும் சிக்கல் இருந்தால் லாஜிக்கலாக எல்லாம் பேசாமல், பார்ட்னர் கேட்பதைச் செய்ய வேண்டும். அதுதான் ரிலேஷன்ஷிப்புக்கு நல்லது. காதலுக்கு எந்த லாஜிக்கும் கிடையாது என்னும்போது இங்கும் அப்படித்தான். ஒருவேளை தன் இணை தன்னுடைய வாழ்க்கையில் அதிகம் டாமினேட் செய்வதாகவோ, அல்லது கன்ட்ரோல் செய்வதாகவோ தோன்றினால் அந்தப் பிரச்னையைப் பற்றி நிச்சயம் பேச வேண்டும். ஆனால், அதை `என் பாய் பெஸ்ட்டி அல்லது கேர்ள் பெஸ்ட்டியை எப்படி தப்பா பேசுவ’ என ஒரு நபரோடு இணைத்துப் பேசினால் சிக்கல்தான்.

ரிலேஷன்ஷிப்பில் எல்லாமே முக்கியத்துவம்தான். யாருக்கு முக்கியத்துவம் தருகிறோம், எதற்குத் தருகிறோம் என்பதை வைத்தே அந்த ரிலேஷன்ஷிப்பின் பலம் இருக்கிறது.

நண்பர்களை எந்த எல்லை வரை அனுமதிப்பது ஒரு ரிலேஷன்ஷிப்புக்கு நல்லது, அவர்களால் வேறு என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம், இன்னும் பலவற்றைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் தொடரலாம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *