Share on Social Media


ராமநாதபுரம்-ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகிஉள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. போதிய வடிகால் வசதியின்றி நகர், புறநகர் வீதிகளில் தண்ணீர் தேங்கி நின்றால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ராமநாதபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னதாகவே பரவலாக பெய்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து காலை வரை மழைபெய்தது.நகராட்சி, சக்கரக்கோட்டை, பட்டிணம்காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால் பராமரிப்படாமல் உள்ளதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் ரோடுகள், தாழ்வான பகுதிகளில் தேங்கிநின்றது.

குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தேங்கியதால் பயணிகளும், வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேங்கியதால் மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் தேங்கிய நீரால் நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கபட்டனர். அக்ரஹார வீதி, ராமேஸ்வரம் ரோடு, பாரதிநகர் ரோட்டிலும் தேங்கியது. நகர், புறநகர் பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி ஒருமணிநேரத்திற்கு மிதமான மழைபெய்தால் கூட தண்ணீர் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் தேங்கி விடுகிறது. மழைநீர் தடையின்றி ஊரணிகளில் சேமிக்க வாய்க்கால்களை செப்பனிடவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய கலெக்டர் சங்கர்லால் குமாவத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *