Share on Social Media


புதுடில்லி: டில்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

டில்லி போலீஸ் கமிஷனராக, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானாவை, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது. குஜராத் கேடரின் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், ஏற்கனவே சி.பி.ஐ.,யில் சிறப்பு இயக்குராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில், டில்லி ஜெய்சிங் மார்க் பகுதியில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில், ராகேஷ் அஸ்தானா கமிஷனராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா நியமனத்திற்கு டில்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ராகேஷ் அஸ்தானா நியமனத்தை உடனடியாக திரும்ப பெற்று கொள்ள வேண்டும் எனக்கூறி டில்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *