Share on Social Media


புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், காங்., பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோரை அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் டில்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.

‘மிஷன் 2024’ எனப்படும் அடுத்த பார்லிமென்ட் தேர்தலை ஒட்டிய திட்டமிடலுக்காக, அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் சரத் பவார், மம்தா பானர்ஜி, அமரீந்தர் சிங் ஆகியோரை சந்தித்தார். பா.ஜ.,வை எதிர்த்து 2024 பார்லிமென்ட் தேர்தலில் வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்தும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகின.

latest tamil news

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில், பிரசாந்த் கிஷோர் இன்று (ஜூலை 13) சத்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, கே.சி.வேணுகோபால், ஹரிஷ் ராவத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவர்களும் உடனிருந்து உள்ளனர். இந்த சந்திப்பில், 2024ல் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தல் குறித்தும், 2022ல் நடக்கவுள்ள பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *