Share on Social Media


சென்னை: சமத்துவ இந்தியாவை நிறுவ நீங்கள் ஆற்றிவரும் ஓய்வில்லா பணியை பாராட்டுகிறேன் என ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தனது சமூக ஊடகப் பக்கங்களிலும், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டதாவது: எனது ஆருயிர் இளவல் ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, எல்லா வகையிலும் சமத்துவமான இந்தியாவை நிறுவுவதற்காக அவர் ஆற்றிவரும் தன்னலங்கருதா – ஓய்விலாப் பணியைப் பாராட்டும் அனைவரோடும் இணைகிறேன். காங்கிரஸ் கட்சியின் அடிப்படைப் பண்புகளின்மேல் அவருக்குள்ள ஈடுபாடு மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக அமையத்தக்கதாகும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *