Share on Social Media


பெங்களூரு : ”உலகத்தையே மாற்றக்கூடிய தலைவர் நீங்கள். உங்களை போன்று வேறு யாரும் இருக்க வாய்ப்பே இல்லை,” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை பாராட்டி, நடிகை ரம்யா கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் பிறந்த நாளை ஒட்டி, நடிகை ரம்யா பாராட்டு மழை பொழிந்துள்ளார்.ராகுலுடைய படத்தை, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து, ”உலகத்தையே மாற்றக்கூடிய தலைவர் நீங்கள். உங்களை போன்று வேறு யாரும் இருக்க வாய்ப்பே இல்லை. ஹேப்பி பர்த் டே,” என்று குறிப்பிட்டுள்ளார்.ரம்யாவின் இந்த பதிவு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில், கன்னடம், தமிழ் என்று சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ரம்யா. பின் காங்கிரசில் இணைந்து, மாண்டியா எம்.பி.,யாகவும் பதவி வகித்தார்.பின்னர் எங்கு சென்றார் என்று தெரியாமல் இருந்தது, தற்போது, வெளிநாட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *