Share on Social Media


புதுடில்லி: கடந்த ஒரு வாரமாக முடக்கப்பட்ட காங்கிரஸ் மற்றம் ராகுலின் டுவிட்டர் கணக்குகள் இன்று விடுவிக்கப்பட்டன.

டில்லியை சேர்ந்த 9 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியின் பெற்றோரை, காங்., – எம்.பி., ராகுல் சந்தித்து ஆறுதல் கூறினார். ‘இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை உடனிருப்பேன்’ என, சிறுமியின் பெற்றோருக்கு உறுதி அளித்தார்.இந்த சந்திப்பு தொடர்பான ‘வீடியோ’வை ராகுல், ‘டுவிட்டர், இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில், சிறுமியின் பெற்றோர் முகம் மறைக்கப்படவில்லை.
‘போக்சோ’ சட்டப்படி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளத்தை பொது வெளியில் பகிரங்கப்படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது. இதையடுத்து, ராகுலின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் சில நிர்வாகிகளின் கணக்கும் முடக்கப்பட்டது.இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த ராகுல், ‛’டுவிட்டர் நிறுவனம் பாரபட்சமாக செயல்படுவதுடன், நாட்டின் அரசியல் நடவடிக்கையிலும் தலையிடுகிறது,” என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கை அந்த நிறுவனம் விடுவித்தது. முடக்கப்பட்ட மற்றவர்களின் டுவிட்டர் கணக்குகளும் விடுவிக்கப்பட்டன.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ரோகன் குப்தா கூறுகையில், காங்கிரஸ் சார்ந்த அனைவரின் கணக்குளையும் டுவிட்டர் நிறுவனம் விடுவித்தது. இதற்கான காரணம் பற்றி கூறப்படவில்லை. டுவிட்டர் கணக்குகள் விடுவிக்கப்பட்டது மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அக்கட்சி வெளியிட்ட முதல் பதிவில், வாய்மையே வெல்லும்‛சத்யமேவ ஜெயதே’ எனக்கூறியுள்ளது.

Advertisement





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *