20201229 112032 Tamil News Spot
Share on Social Media

மறுமுனையில் கிரீன், இதுவரை தொடரில் எந்தப் போட்டியிலும் பெரிதாக எடுபடாமல் போனதால், இந்த இன்னிங்ஸிலாலது தன் பெயரை எழுத வேண்டும் என்ற நோக்கத்தோடே ஆடினார். இதனால் இந்தியாவுக்கான இலக்கு கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது, கூடவே பயமும்! அந்த அழுத்தத்தை உடனடியாய்க் குறைத்தது, சிராஜ் எடுத்த கிரீனின் விக்கெட். தனது 45 ரன்கள் மூலமாக, ஆஸ்திரேலியாவை 46 ரன்கள் முன்னிலை பெற வைத்து கிரீன் வெளியேறினார். புதுப்பந்தையும் சிறிது நேரம் சமாளித்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடிய கிரீனின் இன்னிங்ஸ், ‘இன்னிங்ஸ் தோல்வி’ ஏற்படும் வாய்ப்பிலிருந்து, ஒரு கெளரவமான தோல்வியை நோக்கி அணியை எடுத்துச் சென்றது. அடுத்ததாக இணைந்தது ஸ்டார்க் – லயான் கூட்டணி.

#AUSvIND

#AUSvIND
Asanka Brendon Ratnayake

உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில், லயானின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்த, 185 ரன்களுக்கு ஒன்பதாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. அதனால் ஆட்டம் இன்னும் அரை மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டது‌. கடைசி விக்கெட்டுக்குக் கைகோத்த ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் கூட்டணியை உடைப்பதற்கும் இந்திய பெளலர்கள் கிட்டத்தட்ட 7 ஓவர்களை எடுத்துக் கொண்டனர். இறுதியாக, அஷ்வினின் சுழலில் ஸ்டம்ப் சிதற, ஹேசில்வுட் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு வெற்றி இலக்காய், 70 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் அதிகபட்சமாய் கிரீன் 45 ரன்களை எடுத்திருந்தார்.

இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில், ஒரு பேட்ஸ்மேன் கூட அரைச்சதத்தைத் தொடாதது, 1988-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை. மேலும் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் ரன் விகிதமான 1.93தான் (80+ ஓவர்களை விளையாடிய போது) கடந்த 42 ஆண்டுகளில் அவர்களின் மிகக் குறைவான ரன் ரேட்! ஆஸ்திரேலியாவினை 200 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கியுள்ள இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடைசி 12 இன்னிங்ஸ்களில், இருமுறை மட்டுமே 300 ரன்களுக்கு மேல் அவர்களை அடிக்க விட்டிருக்கிறது. இந்த எண்கள் அத்தனையும் சொல்லும் இந்திய பெளலர்களின் ஆதிக்கத்தை!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *