Share on Social Media


புதுதில்லி:கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா அளித்து வரும் ஆதரவுக்காக அந்நாட்டு அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அவசரகால பயன்பாட்டின் கீழ் அனுமதி அளித்துள்ளது. அடுத்த மாதம் ஸ்புட்னிக்-வி இறக்குமதி செய்யப்பட உள்ளது.பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினார்.

மோடி ‘டுவிட்டரில்’ தெரிவித்து இருப்பதாவது:இந்திய-ரஷ்ய பரஸ்பர கூட்டுறவு குறித்து குறிப்பாக விண்வெளி, தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஹைட்ரஜன், பொருளாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து நண்பர் புடினுடன் பேசியது ஆக்கபூர்வமாக இருந்தது. இரு நாடுகளின் ராணுவம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர்கள் பேச்சு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனா பேரிடருக்கு எதிரான போரில் மக்களை காக்கும். இந்த வகையில் இந்தியாவுக்கு ரஷ்யா அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *