Share on Social Media


சென்னை: சென்னை: இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுப்பட மாட்டேன் என தமிழருவி மணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாணிக்கத்திற்கும், கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற கனவு அவரது ரசிகர்களுக்கு பல ஆண்டுகாலமாக உள்ளது. அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதை உறுதி செய்த ரஜினிகாந்த் அதற்கான பணிகளை முடக்கினார். இதை தொடர்ந்து 3 ஆண்டுகளாக பிறகு மீண்டும் அரசியல் பேச்சை எடுத்த ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளையும் அறிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மருத்துவமனையில் சேர்ந்த ரஜினிகாந்த் தற்போது அவர் உடல்நிலை சரியில்லாலதால் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் இறப்பு என்னை தழுவும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை.

என் நேர்மை, தூய்மை, ஒழுக்கம் போற்றப்படாத அரசியல் களத்தில் விலகி நிற்பதே விவேகமானது. தி.மு.க.வில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்; நான் போகிறேன்; வர மாட்டேன்.  மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன். காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் குற்றம். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று நேற்று அறிவித்த நிலையில், தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *