Share on Social Media


கடந்த 20 ஆண்டுகளாக அடிக்கடி அவர் தமிழகம் வந்திருக்கிறார். எம்.ஐ.டி நிறுவனத்தில் அவர் நிறுவிய ‘பாவர்ட்டி லேப்’ என்ற வறுமை ஒழிப்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சென்னையிலும் கிளை இருக்கிறது. இதன்மூலம் முதியோர்களின் சமூகப் பொருளாதார நிலையை ஆய்வு செய்கிறார். ஆரம்பக் கல்வியை சிறப்பாகத் தருவது, வேலைவாய்ப்புகள் மூலம் இளைஞர்களின் நிலையை மேம்படுத்துவது ஆகியவை இவரின் விருப்பமான பணிகள். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கு இவர் வழிகாட்டுவார்.

ஜீன் ட்ரெஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணராகவே உலகெங்கும் அறியப்படுகிறார். பிரபல பெல்ஜிய பொருளாதார நிபுணரின் மகனாகப் பிறந்த ஜீன் ட்ரெஸ், தனது பிஹெச்.டி ஆராய்ச்சிக்காக இந்தியா வந்தார். 1979 முதல் இந்தியாவில் வசிக்கிறார். 2002-ம் ஆண்டு இந்தியக் குடியுரிமை பெற்றார். தன்னை இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறார். இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

மிக எளிமையான வாழ்க்கையே இவரின் அடையாளம். தன் மனைவியுடன் ஒற்றை அறை வீட்டில்தான் வாழ்கிறார். டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இவர் சிறப்புப் பேராசிரியர். அங்கு கட்டாந்தரையில் சாதாரணமாகப் படுத்துத் தூங்குவார். நகர்ப்புறங்களில் வீடில்லாமல் சாலையோரங்களில் வாழும் மக்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார்.

ஜீன் ட்ரெஸ்

ஜீன் ட்ரெஸ்

வட இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று வறுமை ஒழிப்பு மற்றி ஆய்வு செய்தவர். கிராமத்திலேயே பல மாதங்கள் வாழ்ந்து, அந்த வாழ்வின் துயரங்களை அறிந்தவர். பஞ்சம், வறுமை ஆகியவற்றை ஒழிக்க பல வழிகளைச் சொன்னவர் ஜீன் ட்ரெஸ். கல்வி உரிமை, பெண்களுக்கு சம உரிமை, குழந்தைகள் நலன், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம், வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என அவர் முன்வைத்த பல தீர்வுகள் பிற்காலத்தில் சட்டங்கள் ஆகின. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தேசிய ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினராக இருந்தவர். எளியவர்களின் கையில் ஆயுதமாக மாறிய தகவல் அறியும் உரிமை சட்டம், பட்டினிச் சாவுகளைத் தடுத்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை நிறைவேற இவர் முக்கியமான காரணம்.

நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுடன் இணைந்து நூல்கள் எழுதியுள்ளார் ஜீன் ட்ரெஸ். ‘‘உழைப்பு எல்லாம் அவருடையது. பெயர் மட்டும் எனக்குக் கிடைக்கிறது’’ என்று அமர்த்தியா சென் இவரைப் பாராட்டுவார்.

எங்கோ பெல்ஜியத்தில் பிறந்து, இந்தியாவின் கிராமப்புற வறுமையை ஒழிப்பதையே தன் வாழ்நாள் கனவாகக் கொண்ட எளிய பொருளாதார மேதை ஜீன் ட்ரெஸ். தமிழகத்தின் வறுமை ஒழிப்பு முயற்சிக்கு இவர் கைகொடுப்பார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *