Share on Social Media


மேலும், “வைகோவை திமுகவிலிருந்து நீக்கப் பார்க்கிறார்கள் என்று, 1993-ம் ஆண்டு வைகோவுக்கு ஆதரவாக அடுத்தடுத்து நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராஜபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் இந்த ஐவரும் தீக்குளித்து உயிரிழந்தனர். அன்று திமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவுக்கு ஆதரவாகவும், வைகோவை திமுகவிலிருந்து விலகிவிடக்கூடாது என்பதற்காகவும் தங்களின் உயிரை நீத்தவர்கள் இவர்கள். இப்போது அதையேதான் வைகோ செய்கிறார். அவருக்காக இறந்தவர்களின் ஆன்மாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் வைகோ” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “அதிலும் ஒரு கொடுமை என்னவென்றால், அந்த தீக்குளிப்பு சம்பவம் நடைபெற்றது 1993-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 09-ம் தேதி தான். இப்போது அதே நாளில்தான், வைகோ தனது மகன் அரசியலுக்கு வருவார் என்ற அறிவிப்பையும் வெளியிடுகிறார் வைகோ. இறந்தவர்களின் ஆன்மா எப்படி மன்னிக்கும் இவரை. இதனைத் தாண்டி, கடந்த 56 ஆண்டுகளாகத் தமிழகத்துக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தொடர்ந்து ஓடிக்கொண்டே, உழைத்துக்கொண்டே இருந்த தலைவர் வைகோ மட்டும்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தற்போது துரைக்கும் கட்சியில் பதவி கொடுத்திருப்பது கட்சி உறுப்பினர்கள் பலரும் கொள்கை ரீதியில் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனம்” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *