Share on Social Media


நடிகர் யோகி பாபுவின் மகனுக்கு இன்று பெயர் சூட்டு விழா சென்னையில் நடந்தது. யோகியின் நட்பு வட்டத்தில் இருக்கும் நெருக்கமான சிலர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு மஞ்சு பார்கவி என்பவருடன் கடந்தாண்டு பிப்ரவரி 5-ம் தேதி திடீர் திருமணம் நடந்தது. யோகியின் சொந்த ஊரான செய்யாறு அருகேயுள்ள மேல்நகரம்பேடு கிராமத்தில் மிகவும் எளிமையாக நடந்தது இந்தத் திருமணம். ”சில தவிர்க்க முடியாத காரணங்களால் எல்லோரையும் திருமணத்துக்கு அழைக்க முடியவில்லை” என்றவர், வரவேற்பைச் சென்னையில் நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக நடத்த நினைத்தார்.

கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு அந்த நாளும் நெருங்க, சரியாக அதற்கு இரண்டு நாள் முன்பாக கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்து விட்டது. எனவே லாக்டெளன் முடிந்ததும் திருமண வரவேற்பு நடத்தலாமென இருந்தார்.

நடிகர் யோகி பாபு

ஆனால், அடுத்த சில மாதங்களில் மஞ்சு பார்கவி கர்ப்பமடைய, வளைகாப்பு நிகழ்ச்சியையாவது பெரிய அளவில் கொண்டாடி விடுவது என ஏற்பாடு செய்தார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் 29-ம் தேதி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வளைகாப்புக்கு முந்தைய நாள் இரவே மஞ்சுவுக்கு பிரசவ வலி வந்து அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டார். இதனால் வளைகாப்பு நிகழ்ச்சியை திட்டமிட்டபடி கொண்டாடமுடியாமல் போனது.

திருமணம், வரவேற்பு, வளைகாப்பு என வரிசையாக தள்ளிப் போய்க்கொண்டே போனதில் டென்ஷனானவர், மகனது பெயர் சூட்டு விழாவை நிச்சயம் கொண்டாடியே தீர வேண்டுமென உறுதியாக இருந்தார். இந்நிலையில் பிறந்து ஏழு மாதங்கள் ஆனாலும் பரவாயில்லை என பொறுத்தவர், இன்று தனது பிறந்த நாளுடன் சேர்த்து மகனது பெயர் சூட்டு விழாவையும் நல்ல முறையில் கொண்டாடியிருக்கிறார்.

தனது வீட்டில் வைத்தே விழாவைக் கொண்டாடியவர் மகனுக்குச் சூட்டியிருக்கும் பெயர் விசாகன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *