Share on Social Media


புதுடில்லி: வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று (ஜூலை 15) உத்தரப் பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது, ‘கோவிட் 2வது அலையை உத்தரப் பிரதேச அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. 2வது அலையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:உத்தரப் பிரதேசத்தில் கோவிட் தொற்றால் மக்கள் பெரிய அளவில் இன்னல்களை சந்தித்தனர்; உதவியின்றி தவித்தனர். மோடியும், யோகியும் இதை மறந்திருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் மறந்துவிடவில்லை.கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கை நதிக்கரைகளில் கேட்பாரற்று கிடந்தன.

latest tamil news

பிரதமரின் நற்சான்றிதழால் யோகி அரசின் கொடூரம், அலட்சியப்போக்கு, தவறான மேலாண்மை ஆகியவை மறைந்துவிடாது.இவ்வாறு அவர் பிரதமரையும் யோகி அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *