Share on Social Media

ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய கிளப் கால்பந்து தொடர் யூரோப்பா லீக். சாம்பியன்ஸ் லீகுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இன்று அதிகாலை போலந்தின் கிடான்ஸ்க் நகரில் நடந்தது. ஸ்பெய்னின் வியேரல், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடட் அணிகள் இந்தப் போட்டியில் மோதின. காயம் காரணமாக யுனைட்டட் கேப்டன் ஹாரி மகுயர் பென்ச்சில்தான் போட்டியைத் தொடங்கினார். எந்த கோல் கீப்பரை பயிற்சியாளர் ஷோல்ஸ்கர் கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அனுபவ வீரர் டிகே-வை களமிறக்கினார் யுனைடட் மேனேஜர்.

போட்டியின் ஆரம்ப கட்டத்தில் இரண்டு அணிகளுமே சில நல்ல மூவ்களை மேற்கொண்டன. ஆனால், ஃபினிஷிங் சிறப்பாக இல்லை. பெரும்பாலான ஷாட்கள் இலக்குக்கு வெளியேவே சென்றன. 29-வது நிமிடத்தில் வியேரல் அணிக்குக் கிடைத்த வாய்ப்பை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். மிட் லைனுக்கு கொஞ்சம் தள்ளி வியேரல் வீரர் பரேயோவை ஃபவுல் செய்தார் எடின்சன் கவானி. ஃப்ரீ கிக்கை எடுத்த பரேயோ அதை அட்டகாசமாக பெனால்ட்டி ஏரியாவுக்கு அனுப்பினார். சரியாக மார்க் செய்யப்படாத ஜெரார்ட் மொரேனோ அற்புதமாக ஒரு டச்சில் அதை கோலாக்கினார்.

Villarreal

அதுவரை கொஞ்சம் சுமாராகவே ஆடிய மான்செஸ்டர் யுனைடட் வீரர்கள் அந்த கோலுக்குப் பிறகு சற்று வேகமெடுக்கத் தொடங்கினர். விங்கில் சில நல்ல அட்டாக்குகளை அந்த அணி மேற்கொண்டது. இருந்தாலும், வியேரல் டிஃபன்ஸை அவர்களால் உடைக்க முடியவில்லை. மிகவும் ‘டீப்பாக’ டிஃபண்ட் செய்த வியேரல் வீரர்கள் யுனைடட் அட்டாக்கர்களுக்குப் பெரும் தலைவலியாக இருந்தனர். முதல் பாதியின் முடிவில் 1 – 0 என முன்னிலை பெற்றது வியேரல்.

இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் வியேரல் அணிக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பைத் தவறவிட்டார் கார்லோஸ் பக்கா. யுனைடட் அணியின் அட்டாக் இப்போது இன்னும் கொஞ்சம் வீரியமடைந்திருந்தது. 55-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கோலும் விழுந்தது. அதுவரை திடமாக டிஃபண்ட் செய்துகொண்டிருந்த வியேரல் ஒரு குழப்பத்தால் கோல் விட நேர்ந்தது. யுனைட்டடுக்குக் கிடைத்த கார்னரை லூக் ஷா பெனால்ட்டி ஏரியாவுக்கு அனுப்ப, அதை ஹெடர் மூலம் க்ளியர் செய்தார் ரௌல் ஆல்பியோல். ஆனால், அது பாக்ஸுக்கு வெளியே இருந்த ரேஷ்ஃபோர்ட் வசம் மாட்ட, அதை டார்கெட் நோக்கி அடித்தார் அவர். வியேரல் டிஃபண்டர் பெட்ரோசாவின் காலில் பட்டு, யுனைடட் மிட்ஃபீல்டர் மெக்டாமினாய் கால்களிலும் பட்டு பெனால்ட்டி ஏரியாவுக்குச் செல்ல, அதை கோலாக்கினார் எடின்சன் கவானி. 1-1

AP21146800390182 Tamil News Spot
Manchester United players

அதன்பிறகு யுனைட்டட் பல வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அவர்களால் அதை கோலாக்க முடியவில்லை. கவானியின் ஒரு ஹெட்டரை பௌ டாரஸ் சிறப்பாக பிளாக் செய்தார். இல்லையெனில் போட்டி அந்த இடத்திலேயே முடிந்திருக்கும். 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையிலேயே முடிந்தது. எக்ஸ்ட்ரா டைம் முடிந்த நிலையிலும் அதே ஸ்கோர். அதனால், ஆட்டம் பெனால்ட்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது. ஆட்டம் பெனால்ட்டிக்குச் செல்வது உறுதியாக, இரண்டு அணிகளும் கடைசி நிமிடங்களில் அதற்கு ஏற்ற வீரர்களைக் களமிறக்கின.

பெனால்ட்டி எடுத்த 5 வீரர்களுமே எந்தத் தவறும் செய்யாமல் ஸ்கோர் செய்தனர். 5-5 என பெனால்ட்டி முடிவும் சமனில் முடிய, சடன் டெத் தொடங்கியது. அதாவது, ஒரு அணி ஸ்கோர் செய்து, இன்னொரு அணி அந்த வாய்ப்பைத் தவறவிட்டாலே போட்டி அங்கு முடிந்துவிடும். ஆனால், இங்கும் ஒவ்வொரு வீரருமே ஸ்கோர் செய்துகொண்டே இருந்தார்கள். இரண்டு அணிகளும் தலா 10 ஷாட்கள் எடுத்து முடித்த நிலையில், ஸ்கோர் 10 – 10 என்றே இருந்தது. 11-வது ஷாட். இரண்டு கோல்கீப்பர்களுமே மீதமிருக்கின்றனர். முதலில் ஷாட் எடுத்த வியேரல் கோல் கீப்பர் ரூலி ஸ்கோர் செய்தார். அடுத்து டிகே அடித்த பந்தை ரூலி தடுக்க, வியேரல் சாம்பியன் ஆனது.

AP21146837416179 Tamil News Spot
Gerónimo Rulli

வியேரல் மேனேஜர் உனாய் எமரிக்கு இது நான்காவது யுரோப்பா லீக் கோப்பை. இதுவரை ஐந்து ஃபைனல்களில் பங்கேற்று 4 முறை வென்றிருக்கிறார். செவியா அணியின் மேனேஜராக இருந்தபோது, தொடர்ந்து 3 ஆண்டுகள் (2014, 2015, 2016) யுரோப்பா லீக் சாம்பியன் ஆனார். இப்போது வியேரல் அணிக்கு, அவர்களின் முதல் ஐரோப்பிய கோப்பையை வென்றுகொடுத்திருக்கிறார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *