Share on Social Media


மதுரை: ஓட்டு எண்ணிக்கை மே 2 நடக்கவுள்ள நிலையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதில் கட்சியினர் இடையே ‘திக்… திக்…” மனநிலை இருந்து வருகிறது. மதுரை ஓட்டு எண்ணிக்கை மையங்களில் அவர்களை மீறி யாரும், எந்த பொருட்களும் ஊடுருவ முடியாதபடி கண்காணித்து வருகின்றனர்.

கடந்த லோக்சபா தேர்தலின்போது மருத்துவக்கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் தேவையின்றி நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல் இப்போதும் நடந்துவிடக்கூடாது என்பதில் அதிகாரிகளும், கட்சியினரும் கவனமாக இருந்து வருகின்றனர்.

அதையும்மீறி சில சமயங்களில் புகார் எழுவதும், பிறகு அடங்குவதும் வழக்கமாக உள்ளது. நேற்றுக்கூட அரசு மருத்துவக்கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் கம்ப்யூட்டர், கண்காணிப்பு கேமரா கொண்டு செல்ல தி.மு.க., முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இம்மையத்தில் மதுரை மேற்கு, மத்தி, தெற்கு, வடக்கு தொகுதிகளின் ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன.

மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பகுதியை 24 மணி நேரமும் கட்சி முகவர்கள் கண்காணிக்கின்றனர். ஓட்டு எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்து, தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப ஆன்லைன், பிரின்ட் எடுக்க உள்ளிட்ட சேவைகளுக்காக கம்ப்யூட்டர்கள், கண்காணிப்பு கேமரா பொருத்த நேற்று ஊழியர்கள் கொண்டு சென்றனர்.

தி.மு.க., முகவர்கள் எதிர்ப்பால் திருப்பி எடுத்து சென்றனர். தேர்தல் அலுவலர் பிரேம்குமார் மற்றும் அலுவலர்கள், ‘கலெக்டர் அன்பழகன் அனுமதி பெற்று ஓட்டு எண்ணிக்கைக்கு பயன்படுத்தவே கொண்டு வந்ததாக’ கூறியதை தி.மு.க.,வினர் ஏற்றனர். ஓட்டு எண்ணிக்கை துவங்கும் முன் வரை இதுபோன்று சர்ச்சைகள் தொடரும்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *