Share on Social Media


காத்மாண்டு: நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், பிரதமர் சர்மா ஒலி அரசு தோற்றதால், அவர் பதவியை ராஜிநாமா  செய்தார். புதிய ஆட்சியமைக்க எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் முயன்றும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, இடைக்கால பிரதமராக சர்மா ஒலி மீண்டும் கடந்த 14ம் தேதி பதவியேற்றார். அவர் தனது பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் 30 நாட்களுக்குள் நிரூபிக்க அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார். 275 எம்பிக்களை  கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் 4 எம்பிக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 131 எம்பிக்களின் ஆதரவு தேவை. நேற்று முன்தினம் மாலை நேபாள காங்கிரஸ் தங்களுக்கு பெரும்பான்மை  இருப்பதாக ஆட்சி அமைக்க உரிமை கோரின. அடுத்த சிறிது நேரத்தில் பிரதமர் சர்மா ஒலியும் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறினார். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது. ஆனால் சில எம்பிக்களின் பெயர்கள் இரு தரப்பிலும் இடம் பெற்றிருந்தன. மேலும் சிலர் தங்களின்  கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தியிருப்பதாக குற்றம்சாட்டினர். இதனால் இரு தரப்புக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததைத் தொடர்ந்து அதிபர் பித்யா நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்றத்தை கலைத்து அதிரடி  நடவடிக்கை எடுத்தார். மேலும், நவம்பர் 12ம் தேதி முதல் கட்டமாகவும், 19ம் தேதி 2ம் கட்டமாகவும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

வழக்கு தொடர முடிவு

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி விடுத்த அறிக்கையில், ‘எங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்தும் அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்தது தவறு. எனவே  நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்’ என கூறப்பட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *