Share on Social Media


இதனை எதிர்த்து, காட்டேஜ் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தற்போது இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது‌. வழித்தட மீட்புக் குழுவில் இருக்கும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் ஆட்சியரை மாற்றவேண்டியிருப்பதாகத் தமிழக அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீலகிரி ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வதற்கு, நீதிபதிகள் அனுமதி வழங்கியிருக்கின்றனர்.

யானை ராஜேந்திரன்

யானை ராஜேந்திரன்

யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடிய வழக்கறிஞர் யானை ராஜேந்திரனைத் தொடர்புகொண்டு பேசினோம், “முதுமலைய சுத்தி இருக்கிற மசினகுடி, வாழைத்தோட்டம், பொக்காபுரம், மாவனல்லா உள்ளிட்ட பகுதிகள்ல சுமார் 7 ஆயிரம் பரப்பளவில் 821 காட்டேஜ்கள் யானைகள் வழித்தடத்துல இருக்கு. இதை அகற்றச் சொல்லி 2011-ல சென்னை ஐகோர்ட் உத்தரவு போட்டது. காட்டேஜ் ஓனர்ஸ் சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீலுக்கு போனாங்க. 2020-ல நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா யானைகள் வழித்தடம் தொடர்பான ரிப்போர்ட்ட நல்லமுறையில ஃபைல் பண்ணாங்க. இந்த கேஸ் முடியும் வரை நீலகிரி கலெக்டரை மாத்துக்கூடாதுன்னு கோட்டல முறையிட்டேன். அதை ஏத்துக்கிட்ட நீதிபதிகள் அதையே உத்தரவா போட்டாங்க‌. இதற்கிடையில கலெக்டரை மாற்ற அனுமதிக்க வேண்டும்னு தமிழ்நாடு அரசு சார்புல மனுதாக்கல் செஞ்சாங்க. யானைகள் வழித்தட விகாரத்துல சமீபகாலமா நீலகிரி கலெக்டரோட அணுகுமுறை திருப்திகரமாக இல்ல. அதனால தான் இப்ப அவரை பணியிடமாற்றம் செய்யறதுக்கு கோர்ட் அனுமதி வழங்கியிருக்கு” என்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு பொறுப்பேற்ற இன்னொசென்ட் திவ்யா, 4 ஆண்டுகளுக்கு மேலாக நீலகிரி ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வரும்நிலையில், அவரை பணியிடமாற்றம் செய்யலாம் என தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *