Share on Social Media


மாண்டியா-அடுத்த சட்டசபை தேர்தலில், நாங்களே ஆட்சிக்கு வருவோம் என கூறியதன் மூலம், மீண்டும் முதல்வராகும் விருப்பத்தை, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி வெளிப்படுத்தினார்.மாண்டியாவில், அவர் நேற்று கூறியதாவது:நாங்கள் நேர்மையான முறையில் போராடுகிறோம். ம.ஜ.த., போராடுவது, அதிகாரத்துக்காக அல்ல;மக்களின் கவுரவமான வாழ்க்கை, மாநிலத்தின் பிரச்னைக்கு தீர்வு காண. இரண்டு தேசிய கட்சிகளும், பரஸ்பரம் மோதுகின்றன. மாநிலத்தின் வளங்களை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளன.மாநில பா.ஜ., அரசின் குழப்பங்களுக்கு தீர்வு காண, பொறுப்பாளர் அருண்சிங், மாநிலத்துக்கு வரவில்லை. அது அவருக்கு தேவையுமில்லை. இங்கு பிரச்னைகள் அதிகமாகும் அளவுக்கு, அவரது கட்சிக்கு பணம் வரும். பா.ஜ., காங்கிரஸ் மேலிடம், பொறுப்பாளர்களை நியமித்திருப்பது, பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக அல்ல. நம் மாநிலத்தின் வளங்களை கொள்ளையடிக்க ஊக்கப்படுத்துகின்றன. மாநில மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். கர்நாடகாவில், 2023ல் ம.ஜ.த., ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *