Share on Social Media


மைசூரு-மைசூரு நகரின் ஹினகல் கேர்கள்ளியில் நடந்த கூட்டத்தில் ம.ஜ.த., – எம்.எல்.ஏ., – ஜி.டி.தேவகவுடா பேசியதற்கு காங்., மூத்த தலைவர் மஹாதேவப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மைசூரின் ஹினகல் கேர்கள்ளியில் சில நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ம.ஜ.த., – எம்.எல்.ஏ., – ஜி.டி.தேவகவுடா ஒரே மேடையில் இருந்தனர்.அப்போது அவர் பேசியதாவது:அம்பேத்கர் கொள்கை, சித்தாந்தம், அரசிலமைப்பை புரிந்து கொண்டு, மாற்றங்கள் நடக்க வேண்டும். ஆனால் மக்கள் இதனை இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. படித்தவர்களாகவில்லை.நானும், மஹாதேவப்பாவும் கட்டடத்தை திறந்து வைத்தோம். தவிர்க்க முடியாத காரணங்களால் இந் நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை. சித்தராமையா என்னை விட சிறியவரான மஹாதேவப்பாவை வளர்த்து வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தார்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இதற்கு அதிருப்தி தெரிவித்து, மஹாதேவப்பா நேற்று கூறியதாவது:நாற்பது ஆண்டுகள் என் பொது வாழ்க்கையில் பல கட்சிகள் எனக்கு எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் வாய்ப்பளித்தன. எனக்கு அளித்த பொறுப்பை திறமையாக நிர்வகித்து மக்களின் நன்மைக்காக பணியாற்றினேன்.என்னுடன் இருந்த ஜி.டி.தேவகவுடாவுக்கும் இவ்விஷயம் நன்றாக தெரியும். எனக்கு தெரிந்த வரை எனக்குள் மக்களின் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு அளவில் நிர்வாகம் நடத்த தேவையான அறிவை ஏற்படுத்தியது, தலித் அமைப்புகள் தான். இதற்காக, அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.ஜி.டி.தேவகவுடா, காங்கிரசில் சேருவதாக உள்ள நிலையில், அவருக்கும், மஹாதேவப்பாவுக்கும் இடையில் லடாய் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *