Share on Social Media


கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக ஆட்சி அமைத்தது. 2019, ஜூலை 26-ம் நாள் நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் எடியூரப்பா. வயது மூப்பின் காரணமாக, இரண்டாண்டுகள் மட்டுமே பதவிவகிக்க வேண்டும் என பாஜக தலைமை அப்போது நிபந்தனை விதித்தது.

தற்போது இரண்டாண்டுகள் முடிவடையும் தருவாயில், கடந்த ஜூலை 16-ம் நாள் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வராக எடியூரப்பா ஆட்சி அமைத்து, இன்று 2021 ஜூலை 26-ம் தேதியுடன் சரியாக இரண்டாண்டுகள் முடிவடைந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

எடியூரப்பா

எடியூரப்பா
ANI

கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட்-டிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தபின் பத்திரிகையாளரை சந்தித்த எடியூரப்பா, “முதல்வர் பதவியில் இருந்து நான் விலக வேண்டும் என கட்சி தலைமை எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. இரண்டு ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்வேன் என்று நான் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன். நான் இரண்டாண்டுகள் முதல்வராக பதவி வகிக்க வாய்ப்பளித்ததற்காக பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி நட்டா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *