NTLRG 20201015152400975337 Tamil News Spot
Share on Social Media

மோசடி எதிரொலி – டிவி ரேட்டிங் 12 வாரங்கள் நிறுத்தம்

15 அக், 2020 – 15:24 IST

எழுத்தின் அளவு:


BARC-stops-TV-ratings-for-12-weeks

இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் டிவிக்களின் ரேட்டிங்கை ‘பார்க்’ அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் எந்த டிவிக்கு, எந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது என்பதை அவர்கள்தான் வெளியிட்டு வருகிறார்கள்.

அதை வைத்துத்தான் விளம்பரங்களை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு விளம்பரங்களை அளித்து வருகிறார்கள். பார்க் அமைப்பு மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் ஒவ்வொரு ஊரிலும் பல வீடுகளில் அந்த ரேட்டிங்கை கணக்கிடும் மீட்டர்களை பொருத்திவைத்துள்ளது.

அப்படி பொருத்தி வைக்கப்பட்டுள்ள வீடுகள் எவை என்பது அந்த நிறுவனத்தைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அப்படி மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள வீடுகளைக் கண்டறிந்து சில செய்தி சேனல்கள் அவர்களது டிவிக்களை பணம் கொடுத்து பார்க்க வைத்தது என புகார் எழுந்தது.

இதையடுத்து செய்தி சேனல்களின் ரேட்டிங்கை 12 வாரங்கள் வரை பார்க் அமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. கணக்கீடு முறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *