Share on Social Media


பெங்களூரு: காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் ஆபாச படம் பார்த்த விவகாரத்தின் எதிரொலியாக, கர்நாடக சட்ட மேலவையில், எம்.எல்.சி.,க்கள் மொபைல் போன் கொண்டு வர, சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தடை விதித்துள்ளார்.

கர்நாடக சட்ட மேலவை கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்தது. அப்போது, காங்கிரஸ் எம்.எல்.சி., பிரகாஷ் ரத்தோட், மொபைல் போன் பார்த்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாக ஆர்வமாக அவர் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த, தனியார், ‘டிவி’ கேமராமேன், கேமராவை ரகசியமாக அவர் பக்கம் திருப்பினார்.’டிவி’யில் காட்சிஅப்போது, ரத்தோட் தன் மொபைல் போனில், ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இந்த காட்சிகள், அந்த, ‘டிவி’யில் ஒளிபரப்பாயின. அது குறித்து, ரத்தோடிடம் கேட்ட போது, ‘வேறு ஒருவர் அனுப்பிய படம் அது. அது என்னவென்று பார்த்துக் கொண்டிருந்தேன்’ என, சமாளித்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று கூறியதாவது:சட்ட மேலவை கூட்டத்தொடர் நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப, தனியார் ஊடகங்களின் கேமராக்களை தடை செய்ய மாட்டோம். ஆனால், விவேகத்துடன் மீடியாக்கள் நடந்து கொள்ள வேண்டும்.சிறு விஷயங்களையும், பெரிதாக, ‘டிவி’களில் ஒளிபரப்பப்படுகின்றன. சபையில் பல முக்கிய பிரச்னைகள் குறித்து கடுமையாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால், அதை ஒளிபரப்புவதில்லை.அவ்வப்போது சிறு தவறுகள் நடக்கும். அது குறித்து மீடியாக்கள் அரசை எச்சரிக்க வேண்டும்.

ஆனால், நாள் முழுதும் சபை, சரியாக நடப்பதில்லை என்ற தோற்றத்தை உருவாக்க கூடாது.கூட்டத்தொடர்மேலும், உறுப்பினர்கள் யாரும், சட்ட மேலவைக்குள் மொபைல் போன்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்படும். இதற்காக, சில விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.மார்ச், 4 முதல், பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. முதல், 2 நாட்கள், ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ தொடர்பாக விவாதிப்பது குறித்து, அரசிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. இதனால், கேள்வி நேரம் துவங்குகிறோம்.

முந்தைய காலங்களில், குறிப்பிட்ட சமுதாயங்களின் குடும்ப பொருளாதார நிலைக்கேற்ப இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. அது போல அறிவித்தால் மட்டுமே, அனைத்து சமுதாயங்களின் ஏழைகளுக்கு நீதி கிடைக்கும்.பல மடாதிபதிகள் தங்கள் சமுதாயங்களுக்கு, இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. அவர்கள் பெரியவர்கள், பேசாமல் இருப்பதே நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.ஏற்கனவே, சட்டசபையில், அமைச்சர்கள் சிலர் ஆபாச வீடியோ பார்த்ததால், மொபைல் போன்கள் எடுத்து வர, எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, எம்.எல்.சி.,க்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *