Share on Social Media


பொருளாதாரத் தடை குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் (Hua Chunying), “ட்ரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த மைக் பாம்பியோ உள்ளிட்ட 28 பேருக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 28 நபர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவோவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் சீனாவுடன் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்காவில் உள்ள சில சீன எதிர்ப்பு அரசியல்வாதிகள், தங்கள் சுயநல அரசியல் நலன்கள், சீனாவுக்கு எதிரான தவறான எண்ணங்கள் மற்றும் வெறுப்பு காரணமாக, திட்டமிட்டு சீனாவுக்கு எதிராகத் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வந்தனர். சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றி இவர்கள் தலையிட்டனர். சீனாவின் நலன்களை மதிக்காமல் சீன மக்களைப் புண்படுத்திய வகையிலும் சீனா-அமெரிக்க உறவுகளைச் சீர்குலைக்கும் வகையிலும் இவர்கள் நடந்துகொண்டனர்” என்று ஹுவா தெரிவித்தார்.

மைக் பாம்பியோ

மைக் பாம்பியோ
Andrew Harnik

சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் மற்றும் இன சிறுபான்மையினர் மீதான கொள்கைகள், “இனப்படுகொலை” என்று மைக் பாம்பியோ விமர்சித்தால், பாம்பியோ மீதான கோபத்தில் சீனா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிகிறது.

பாம்பியோவைத் தவிர, இந்த பட்டியலில் ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் கே நவரோ (Peter K Navarro), தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ பிரையன் (Robert C O’Brien), வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை மூலோபாயவாதி ஸ்டீபன் கே பானன் (strategist, Stephen K Bannon), மக்கள் சேவை செயலாளர் அலெக்ஸ் எம் அசார் (Alex M Azar) மற்றும் ஐ.நா தூதர் கெல்லி டி கே கிராஃப்ட் (Kelly D K Craft), கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி செயலாளர் டேவிட் ஆர் ஸ்டில்வெல் (David R Stilwell), முன்னாள் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகர் மத்தேயு பாட்டிங்கர் (Matthew Pottinger); பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறை மாநில செயலாளர் கீத் ஜே கிராச் (Keith J Krach); மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் (John Bolton) ஆகியோர் அடங்குவர்.

முன்னதாக, மைக் பாம்பியோ வின் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஹுவா, “கடந்த சில ஆண்டுகளில் பாம்பியோ சொன்ன விஷப் பொய்கள் எண்ணில் அடங்காதவை, பாம்பியோ கூறியது நகைச்சுவையான புனைகதைகளில் ஒன்றாகும். இப்படி மோசமான பொய் சொல்லி ஏமாற்றுபவர், தனது பொய்கள் மூலம் தன்னை ஒரு கோமாளியாக, நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாளனாக தெரிக்கறார்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *