Share on Social Media


புதுடில்லி:’பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்த மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் அலபன் பந்தோபாத்யாய் கடுமையான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்’ என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த பிரதமரின் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி புறக்கணித்தார். மாநிலத் தலைமைச் செயலர் அலபன் பந்தோபாத்யாயாவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.மூன்று மாத பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் மத்திய அரசு பணிக்கு திரும்பும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் மேற்கு வங்க முதல்வரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைத்திந்திய சேவை அதிகாரிகளாவர். ‘ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நாட்டின் இரும்பு சட்டம் போன்றவர்கள்’ என நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் கூறியுள்ளார்.ஆனால் மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலரான பந்தோபாத்யாய் முதல்வரின் தனிப்பட்ட அதிகாரி போல் செயல்பட்டுள்ளார். முதல்வரின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் செயல்பட்டுள்ளார்.

பல தரப்பட்ட கலாசாரம் அரசியல் செயல்பாடுகள் உடைய நம் நாட்டில் மாநில நிர்வாகத்தில் யார் இருந்தாலும் அதிகாரிகள் நேர்மையுடனும் நாட்டுக்காகவும் செயல்பட வேண்டும். பந்தோபாத்யாய் செயல்பாடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இளம் அதிகாரிகளுக்கு இது ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்து விடக் கூடாது. அதனால் அவருடைய நடவடிக்கைகளுக்கு ஏற்ற கடுமையான நடவடிக்கை சநதிக்க நேரிடும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *