Share on Social Media


புதுடில்லி : ‘தேர்தல் பாதுகாப்பு பணிகளில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்துவது குறித்து, மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள கருத்துகள் தவறு’ என, தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, ‘பாதுகாப்பு பணிகளுக்காக, இம்மாநிலங்களுக்கு துணை ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்படுவர்’ என, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.துணை ராணுவத்தினரை வேண்டுமென்றே அனுப்புவதாக, மேற்கு வங்க அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து, தலைமை தேர்தல் கமிஷனின் நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டசபை அல்லது லோக்சபா தேர்தல் நடக்கஉள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.இந்த நடைமுறை, 1980களின் பிற்பகுதியில் இருந்து தொடர்கிறது. கடந்த லோக்சபா தேர்தலின்போதும், இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.பாதிப்பு ஏற்படும் என, முடிவு செய்யும் பகுதிகளில், பாதுகாப்பு பணிகளுக்காக, இவர்கள் முன்னதாக அனுப்பி வைக்கப்படுவர்.

அதன்படியே விரைவில் தேர்தல் நடக்கும் நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கு, 25 ஆயிரம் துணை ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். எனவே, இது மேற்கு வங்கத்திற்கான தனிப்பட்ட நடவடிக்கை என, கருதுவது தவறு. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *