Share on Social Media


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜ,வின் இல்லந்தோறும் பிரசாரத்தை கட்சியின் தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைத்தார். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்றிவிட்டு ஆட்சியை கைப்பற்றுவதில் பாஜ குறியாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பாஜ தற்போதே மேற்கொண்டு வருகின்றது. மிகப்பெரிய அளவில் மக்களை சந்திக்கவும் ஆதரவு திரட்டவும் பாஜ திட்டமிட்டுள்ளது.

பாஜவின் அநீதிக்கு இடமில்லை என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வது நேற்று தொடங்கப்பட்டது. கட்சியின் தலைவர் ஜேபி நட்டா இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்தார். பாஜ எம்பி சட்டர்ஜி மற்றும் அர்ஜூன் சிங் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜியின் குடியிருப்புக்கு சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரீஷ்முகர்ஜி சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஜேபி நட்டா சென்றார். அங்குள்ள மக்களுடன் அவர் கலந்துரையாடி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பாஜவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *