Share on Social Media


மைசூரு: மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தலில், காங்கிரஸ் தோல்விக்கு காரணம் குறித்து, நாளை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல், சமீபத்தில் நடந்தது. தேர்தலில், மேயராக, ம.ஜ.த.,வின் ருக்மினி, துணை மேயராக, காங்கிரசின் அன்வர் பெய்க் தேர்வு செய்யப்பட்டனர்.காங்கிரஸ் வேட்பாளர் தான், மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. திடீரென, அனைத்து காங்கிரஸ் கவுன்சிலர்களும், ம.ஜ.த., பக்கம் திரும்பியது எப்படி என்று, காங்கிரசில் பெரும் அதிர்ச்சியை எழுந்துள்ளது.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரில், மாநகராட்சியை தவற விட்டதால், உட்கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதனால் மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், மேயர் தேர்தலில், திருப்பம் ஏற்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, அக்கட்சியின் மாநில செயல் தலைவரான துருவநாராயணாவுக்கு உத்தரவிட்டார்.இது குறித்து, துருவ நாராயணா, நேற்று சாம்ராஜ்நகரில் கூறியதாவது:மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தலில், எதிர்பாராத சம்பவம் நடந்து விட்டது.தேர்தல் நடந்த நாளன்று, நண்பகல், 12:00 மணி வரை அனைத்து காங்கிரஸ் கவுன்சிலர்களும் ஒற்றுமையாக இருந்தனர்.ஆனால், இறுதியில், ம.ஜ.த., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது, எப்படி என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து விசாரித்து வருகிறேன்.மார்ச் முதல் தேதி, மாநில தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதே, கட்சி கவுன்சிலர்கள், சித்தராமையாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இது தவறு. கட்சியின் கொள்கைக்கு எதிரானது.சிலர், சித்தராமையா குறித்து, ஊடகத்தினரிடம் குற்றம்சாட்டினர். கட்சி பிரச்னைகளை, தலைவர்களிடம் சொல்லி தீர்த்து கொள்ள வேண்டும். பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்க கூடாது.காங்கிரஸ் என்பது பெரிய குடும்பம். அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். சித்தராமையா என்ற புலியை, குமாரசாமி, இரும்பு கூண்டுக்குள் அடைத்துவிட்டார் என்று, பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹா, குற்றம்சாட்டினார்.ஆனால், சித்தராமையா, எப்போதும் புலி தான். அவர், எலிகளிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.மேயர், துணை மேயர் தேர்தலில் காங்கிரசுக்கு பதவி கிடைக்காமல் போனதற்கு, அக்கட்சியின், எம்.எல்.ஏ., தன்வீர் சேட் தான் முக்கிய காரணம் என்றும், இறுதியில், ம.ஜ.த.,வுடன் இணைந்து அனைத்து கவுன்சிலர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தினார் என்று மேலோட்டமாக தெரியவந்துள்ளது.இதனால், தன்வீர் சேட்டுக்கு நோட்டீஸ் வழங்க, காங்கிரஸ் தலைவர் சிவகுமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து, தன்வீர் சேட் கூறுகையில், ”நான் எந்த தவறும் செய்யவில்லை. நோட்டீஸ் வந்தால், பதிலளிப்பேன்,” என்றார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *