Share on Social Media

மேனேஜ்மென்ட் குரு என்று அழைக்கப்பட்ட கல்வியாளர், பத்மஸ்ரீ பாலா வி.பாலச்சந்திரன், இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 84.

பாலா வி பாலச்சந்திரன்

அமெரிக்காவில் நார்த்வெஸ்டன் பல்கலைக்கழகத்தின் கெல்லாஜ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் கணக்கியல், தகவல் மற்றும் மேலாண்மைத் துறையின் மாண்புறு பேராசிரியராகச் செயல்பட்டுவந்தவர், சென்னையில் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்-ஐ நிறுவி அதன் நிர்வாகக் குழுவின் தலைவராகவும், மாண்புறு துறைத் தலைவராகவும் இயங்கிய பாலச்சந்திரன் பிறந்தது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில்!

புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி என்ற கிராமத்தில் 5 ஜூலை 1937-ல், ஜம்பகம், வெங்கட்ராமன் தம்பதியின் 6 குழந்தைகளில் மூத்த மகனாகப் பிறந்தார்; சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் தலைவருமான எஸ்.சத்தியமூர்த்தி இவரது தாய் மாமா. புதுக்கோட்டையில் பள்ளி, இன்டர்மீடியட் கல்வியை முடித்த பாலச்சந்திரன், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புகளைச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

13 Tamil News Spot
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அங்கு என்சிசி-யில் ‘சீனியர் அண்டர் ஆபிசர்’ நிலையை அடைந்த பாலச்சந்திரன், ராணுவ வீரர் ஆவதற்கான பயிற்சிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். என்றபோதிலும், 1959-ல் படிப்பு முடிந்ததும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறை, இவருக்கு பேராசிரியர் பணி வழங்க முன்வந்தது. 1962- இந்திய – சீன யுத்தம் மூண்டபோது, ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் பாலச்சந்திரன். போரின் முடிவில் கேப்டனாக வெளியே வந்தவர், மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் என்சிசி கமாண்டராகவும், பேராசிரியராகவும் பணியைத் தொடர்ந்தார்.

1966-ல் ‘சர்வதேச மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் முகமை’ (USAID) ஒருங்கிணைப்பில், முனைவர் லாண்டில் கெப்ஹார்ட் நடத்திய ஒரு மாதம் நீண்ட பயிற்சிப் பட்டறை ஒன்றில் பாலச்சந்திரன் பங்கெடுத்தார். பயிற்சியின் முடிவில், அமெரிக்காவின் ஒஹையோவின் டேய்ட்டன் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும், முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொள்வதற்கான முழு கல்வி உதவித் தொகை இவருக்குக் கிடைத்தது. அங்கு எம்.எஸ்.இ படிப்பை முடித்த பாலச்சந்திரன், அதே பல்கலைக்கழகத்தில் 1970-ம் ஆண்டு துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பிறகு கார்னெகி மெல்லோன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ-வும் முனைவர் பட்டமும் படிக்கச் சென்ற பாலச்சந்திரன், நார்த்வெஸ்டன் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பள்ளியில் (இப்போது கெல்லாஜ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட்) 1973-ல் சேர்ந்தார். அங்கு அவரது திறமையை அங்கீரித்து, கணக்கியல், தகவல் மற்றும் நிர்வாகத் துறையின் ஜே.எல்.கெல்லாக் பேராசிரியர் இருக்கை 1984-ல் இவருக்கு வழங்கப்பட்டது.

1533116940phpP9RNAb Tamil News Spot
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

2002-ம் ஆண்டு நடந்த பைபாஸ் சர்ஜரியின்போது கிட்டத்தட்ட வாழ்வின் இறுதி நிலைக்குச் சென்று திரும்பிய பாலச்சந்திரனின் மனதில் தோன்றியது, கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்-க்கான திட்டம். அதன் விளைவாக, தன்னுடைய சேமிப்புகளைக் கொண்டு மற்றும் விரிந்த தொடர்புகளின் உதவியுடன், 2004-ம் ஆண்டு சென்னைப் புறநகரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த மேலாண்மைப் பள்ளியைத் தொடங்கினார் பாலச்சந்திரன்.

Tamil News Spot
கிரேட் லேக்ஸ்

இன்று 27 ஏக்கர் பரப்பளவில் பசுமை வளாகமாக விரிந்திருக்கிறது கிரேட் லேக்ஸ்; கிரேட் லேக்ஸின் இரண்டாவது வளாகம் குர்கானில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2004-ம் ஆண்டிலிருந்து சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் கிரேட் லேக்ஸில் படித்துப் பட்டம் பெற்றிருக்கின்றனர்.

Also Read: பொறியியல் பட்டதாரிகள் ஆசிரியர் பணியில் சேர B.Ed படிக்க வேண்டுமா? | Doubt of Common Man

பாலச்சந்திரன் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அடல் இனோவேஷன் மிஷன், நிதி ஆயோக், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஆகியவற்றின் உதவியோடு, ‘அடர் கிரேட் லேக்ஸ் பாலச்சந்திரன் இன்குபேட்டர்’ (AGBI) என்ற தொழில்முனைவோர் ஊக்கப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியிருந்தார்.

Tamil News Spot
பாலா வி.பாலச்சந்திரன்

இந்தியாவில் மேலாண்மைக் கல்வியின் வடிவமைத்தவர்களில் முதன்மையானவராகக் கருதப்படும் பாலச்சந்திரனின் இறப்பு, மேலாண்மைக் கல்வி வட்டாரத்தில் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *