Share on Social Media

அம்மாக்களை இப்படி புனிதப்படுத்துவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பெண்கள் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை பெண்களையும் இந்த அடிமைத்தனத்துக்குள் சிக்க வைக்கிறார்கள். பண்பாடு மற்றும் கலாசாரம் என்று உருவாக்கி வைத்திருக்கும் ஆண் மைய சமூகத்தின் பிற்போக்கு மற்றும் பெண்ணடிமைத்தனங்களை அடுத்த தலைமுறை பெண்களுக்கு கடத்தும் மீடியமாக இத்தகைய அம்மாக்கள் இருக்கிறார்கள்.

நம் நாட்டில் குடும்பத்தை நிர்வகிப்பது, பிள்ளைகளை வளர்ப்பது பெண்களை சார்ந்த விஷயமாக இருக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் இருந்தால் அது முழுக்க தாயின் பொறுப்பாகிறது. சிறு வயதில் மிக சாதாரணமாக கூறப்படும் ‘சத்தமாக பேசாதே’, ‘வீட்டுக்குள் பாடாதே – ஆடாதே’, ‘தெருவில் ஆண் பிள்ளைகளுடன் விளையாடாதே’ போன்ற விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணுக்கு சுதந்திரமாக தனித்து செயல்பட மிகப்பெரும் மனத்தடையை உருவாக்கும்.

எங்கள் வீட்டில் எப்போதும் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கும் அளவிற்கு அம்மாவுக்கு பாடல்கள் என்றால் பிடித்தம். ஆனால், நினைவு தெரிந்த நாளில் இருந்தே நான் பாடும்போது, ”பாட்டு பாடி நாளைக்கு மாமியார் வீட்ல போய் பேரைக் கெடுக்காத” என்று, மாமியார் என்றால் யாரென்றே தெரியாத வயதிலிருந்தே மாமியார் பெயரை சொல்லி கண்டிப்பார். எனக்கு திருமணமான மறுநாள் சமைக்கும்போது மாமியார் பாடிக்கொண்டிருந்தார். பாடினால் மாமியார் திட்டுவார்கள் என்று அம்மா சொல்லியதை சொன்னேன்.

பாட்டி - பேத்தி

பாட்டி – பேத்தி

பல குடும்பங்களில் பெண்கள் தாங்கள் நினைத்ததை படிக்க, தங்களது திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் போவதற்கும், திருமண வாழ்க்கையில் தங்களை சுருக்கிக் கொள்வதற்கும் பெரும்பாலும் ‘நல்ல வளர்ப்பு’ என்கிற பெயரில் அம்மாக்கள் ஊட்டி வளர்க்கும் பிற்போக்குத்தனங்களே காரணம். படிப்பு, வேலை இருந்தும் அவற்றை மிக எளிதாக உதறிவிட்டு திருமணத்திற்கு பிறகு சமைப்பது, வீட்டைக் கூட்டிப் பெருக்குவது, பிள்ளைகளை கவனித்துக்கொள்வது மட்டுமே ஒரு பெண்ணை ’உயர்வானவளாக’ இந்த சமூகம் பார்க்கும் என்று இன்று அறுபதுகளில் இருக்கும் அம்மாக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *