Share on Social Media

அதுபோக பிரியமானவர்களின் இழப்பு, இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் தொடர்ந்து கேட்கும் மரணம் மற்றும் நோய் பற்றிய செய்திகள் மனநலத்தை பாதிப்படையச் செய்யலாம்.

உலகில் நடக்கும் 36.6 சதவிகிதம் இந்தியாவில் நடப்பதாக லான்செட் வீக்லியின் ஆய்வு கூறுகிறது. 15 முதல் 29 வயது வரையில் உள்ள பெண்களின் மரணத்திற்கு தற்கொலை ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் அதிக கவனம் மற்றும் உடனடி நடவடிக்கையும் தேவைப்படும் இத்தகைய ஆய்வு முடிவுகள் பொது சமூகத்தில் சிறு சலசலப்பைக்கூட ஏற்படுத்துவதில்லை.

அதே சமயம் மனநலப் பிரச்னைகள் இருந்த ஒருவர் திடீரென்று தற்கொலை செய்து கொள்ளும் போது சமூக வலைத்தளங்களில் எதிர்வினைகள் வேறு மாதிரி இருக்கின்றன.

“மனநலம் சரியில்லை என்றால் தனியாக இருக்காதீர்கள், கவலையில் இருக்காதீர்கள், எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு பேசுங்கள்” என்று பலரும் தொடர்பு எண்களை பகிர்வதை பார்த்திருக்கலாம். ஒருவகையில் இத்தகைய Moral Support பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையாக இருந்தாலும் மன நோய்களுக்கான சரியான தீர்வு மருத்துவரிடம் செல்வதே ஆகும். ஆன்லைனில் ஆதரவு என்கிற பெயரில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் இதனால் ஏற்படுகின்றன.

Are you depressed என்பது Pickup lineஆக மாறுவதற்கு பின்னால் குடும்பங்களில் மனநல பிரச்னைகளை கையாளும் விதம் முக்கிய காரணங்களில் ஒன்று. குடும்பத்தில் ஒருவருக்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிந்தாலும், அவரின் நியாயமான கேள்விகள், கோபங்கள்கூட மனநலம் பாதிப்பட்டிருப்பதின் விளைவு என சொல்லி புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கு பயந்து பலரும் தாங்கள் உணரும் மன மாற்றங்களை ஆரம்பத்திலேயே சொல்வதில்லை. அதேசமயம் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒருவர் சொல்லும்போது அதை அலட்சியப்படுத்தும் குடும்பத்தினரே இங்கு அதிகம். இந்த அலட்சியங்கள் மற்றும் புறக்கணிப்புகள் பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் கிடைக்கும் இடம் நோக்கி நகர்த்துகிறது. அந்நகர்வினால் பிரச்னைகள் ஏற்படும்போது ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களே அங்கு பலியாக்கப்படுகிறார்கள். #VictimBlaming

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *