Share on Social Media


தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களையும், புதுச்சேரியில் காரைக்கால் பகுதியையும் சேர்த்து சுமார் 28 லட்சம் ஏக்கர்களில் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, உளுந்து, சோளம் போன்றவை காவிரி நீரினால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணையை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், அதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் விவாதித்து தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறது.

மேக்கேதாட்டூ

மேக்கேதாட்டூ

அதன் தொடர்ச்சியாக முதல்வர் ரங்கசாமி நேற்று தனது அலுவலகத்தில் மேக்கேதாட்டூ அணை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “காரைக்கால் கடைமடைப் பகுதி விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு அச்சுறுத்தல் வந்துள்ளது. கர்நாடக அரசு மேக்கேதாட்டூவில் அணை கட்டி தமிழகத்திற்கும், புதுவைக்கும் வரவேண்டிய நீரை தடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தடுக்க முயற்சி எடுத்துள்ளது,



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *