Share on Social Media


அதுமட்டுமல்ல, அணைகட்ட கர்நாடக அரசு தேர்வு செய்திருப்பது வனத்துறைக்குச் சொந்தமான இடம். இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இன்னும் அணைகட்ட ஒப்புதல் வழங்கவில்லை. அதற்குள்ளாக, நீராற்றல் துறை கர்நாடக அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு வழிகாட்டிக் கொண்டிப்பதில் இருந்து எந்த சட்ட விதிமுறைகளையும் இந்திய அரசு கடைபிடிக்கவில்லை என்று தெரிகிறது. உண்மை நிலை இப்படியிருக்க, தமிழக பா.ஜ.கவின் போராட்ட அறிவிப்பு வேடிக்கையாக இருக்கிறது. தமிழர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான நாடகமாகத்தான் இந்தப் போராட்டத்தை நான் பார்க்கிறேன். உண்மையாகவே அவர்கள் எதிர்ப்பதாக இருந்தால், கர்நாடக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பவேண்டும் எனப் போராடவேண்டும்” என்கிறார் அவர்.

மேக்கேதாட்டு

மேக்கேதாட்டு

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழக பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர், நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,

” தமிழகம் ஏற்றுக்கொண்டால் தவிர அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஷெகாவத், நாடாளுமன்றத்தில், பழைய ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். விரிவான திட்ட அறிக்கைக்குப் பிறகு, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் கடிதங்களைப் பெற மத்திய அரசு கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 20-ம் தேதியன்று , கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்தில், தமிழக அரசு அணைகட்ட ஒப்புதல் கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருப்பதாகவும் அதே பதிலில், கூறியுள்ளார். இதன்மூலம் தமிழக அரசின் ஒப்புதல் இல்லையென்றால், அணைகட்ட அனுமதி அளிக்க முடியாது என்பதை மத்திய அரசுதெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால், கர்நாடக அரசியல்வாதிகள் (பா.ஜ.க உள்பட) தொடர்ந்து இந்த விவகாரத்தை எழுப்பி ஒரு பதற்றத்தை உருவாக்குகிறார்கள். அதனை முறியடிக்கும் விதமாகத்தான் தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்துகிறது” என்றார் அவர்.

இதனிடையே, `மேக்கேதாட்டுவில் அணையக் கட்டியே தீருவோம். அண்ணாமலை கூறுவது பற்றி கவலையில்லை. அதற்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *