Share on Social Media


இளம் பெண் பத்திரிகையாளர் நீல் பேடி:

அமெரிக்காவில் இயங்கி வரும் ‘Tampa Bay Times’ பத்திரிகையில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியான நீல் பேடிக்கு ‘Local Reporting’ பிரிவில் சிறந்த புலனாய்வு செய்தியாளருக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தில் போலீஸார் உதவியுடன் எதிர்கால குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காணக் கணினி மாடலிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 1000 பேரை அடையாளம் கண்டு குற்றங்களைத் தடுக்க நீல் பேடி உதவியிருக்கிறார். கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றங்களைத் தடுத்ததற்காக சிறந்த உள்ளூர் புலனாய்வு செய்தியாளர் பிரிவில் நீல் பேடி மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய காத்லீன் என்பவருக்கும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் நீல் பேடி!

நீல் பேடி

நீல் பேடி

டார்னெல்லா பிரேசியர்:


அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25-ம் தேதி கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி உலகளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கறுப்பின மக்களுக்கு எதிரான இந்த செயலைக் கண்டித்து உலகம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. அதன் விளைவாக ஓராண்டுக்கால விசாரணைக்குப் பிறகு கொலை செய்த காவலருக்குத் தண்டனை கிடைத்தது.

போலீஸாரின் மனிதாபிமானமற்ற செயல் அந்த கலவரக் கூட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்திருந்தால் இன்று அந்த காவலர் நிரபராதி என்று வெளியில் சுற்றிக் கொண்டிருந்திருப்பார். ஆனால், அனைவரும் சாலையில் அலறியடித்துக் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், 17 வயது இளம்பெண் டார்னெல்லா பிரேசியர் தைரியமாக காவலரின் ஈவு இரக்கமற்ற செயலை தனது செல்போனில் பதிவு செய்தார். அந்த வீடியோ ஒன்று மட்டும் இல்லாமல் போயிருந்தால் அப்பாவி ஜார்ஜ் பிளாய்ட்-ன் மரணத்திற்கு நீதி கிடைக்காமலேயே போயிருக்கும். டார்னெல்லா பிரேசியர் பதிவு செய்த வீடியோ தான் இந்த கொலை வழக்கில் தீர்ப்பைத் தீர்மானித்தது.

டார்னெல்லா பிரேசியர்

டார்னெல்லா பிரேசியர்

கலவர நேரத்தில் அந்த வீடியோவை பதிவு செய்து கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்டதை அம்பலப்படுத்திய டார்னெல்லா பிரேசியருக்கு உலகின் மிக உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டார்னெல்லா பிரேசியருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதைக் குறித்து புலிட்சர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள விருது குழு, “ஜார்ஜ் பிளாய்டின் கொலையைத் தைரியமாகப் பதிவு செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. பிரேசியரின் வீடியோவானது, உலகம் முழுவதும் காவல்துறையின் கொடூரமான தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி, உண்மை மற்றும் நீதியை வெளி உலகிற்கு தெரிவிப்பதில் குடிமக்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறது. அநீதிக்கு எதிராகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட இந்த சமூகத்துக்கு இன்னும் பல பிரேசியர்கள் தேவைப்படுகிறார்கள். வாழ்த்துகள் பிரேசியர்..!!

புலிட்சர் விருதைப் பெற்றிருக்கும் இந்த இளம்பெண் சாதனையாளர்களுக்குப் பாராட்டு சான்றிதழும், சுமார் 15,000 அமெரிக்க டாலர்களும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *