Share on Social Media


சென்னை–ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில், மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் துவங்கியது.

சென்னை விமான நிலையம் – விம்கோ நகர், பரங்கிமலை – எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மெட்ரோ நிலையங்கள் இடையே இயக்கப்பட்டு, கொரோனா ஊரடங்கால், இவ்வாண்டு மே 10ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டிருந்தது.ஊரடங்கு தளர்வால், மெட்ரோ ரயில் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் துவக்கப்பட்டது.

ரயிலில், 50 சதவீத பயணியர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனினும், சில ரயில்களில் பயணியர் கூட்டம் அதிகம் காணப்பட்டது.இது குறித்து மெட்ரோ ரயில் இயக்க பிரிவு அதிகாரி கூறியதாவது:ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், மெட்ரோ சேவை மீண்டும் துவங்கியுள்ளது.

முதல் நாளில், 40 சதவீத பயணிகள் பயணித்துள்ளனர்.உரிய பாதுகாப்புடன் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால், பயணியர் வருகை, படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். பயணியர் வருகைக்கு ஏற்ப, கூடுதல் ரயில்களும், இயக்க நேரமும் நீட்டிப்பு செய்யப்படும்.இவ்வாறு அதிகாரி கூறினார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *