Share on Social Media



மூக்கிரட்டை கீரை அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. சிறந்த டையூரிடிக் ஆக செயல்படுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்கலாம். மேலும் மூட்டுவலி மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை நன்மை செய்யும்.
இதன் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து பார்க்கலாம்.

​மூக்கிரட்டை வேர் நன்மைகள்

மூக்கிரட்டை ஆயுர்வேதத்தில் காலங்காலமாக பயன்படுத்தப்படும் முக்கியமான பொருள். இதை எப்படி பயன்படுத்துவது என்பதை ஆயுர்வேத மருத்துவ நிபுணர் கூறும் குறிப்புகள் மூலம் அறியலாம்.

மூக்கிரட்டை சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள், அதிக மாதவிடாய், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பெண்களுக்கு இரத்த உறைதல் போன்றவற்றை குணப்படுத்தும்.

licorice : அதிமதுரத்தை எப்படி எடுப்பது? பக்கவிளைவுகள் என்ன? அளவாக எடுத்தால் என்ன நன்மை கிடைக்கும்?

மூக்கிரட்டை பொடி உடல் பருமனை எதிர்த்து போராடி இதய செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இது கண்களுக்கும் செரிமானத்துக்கும் நல்லது. மேலும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

இது ஆண்மைக்குறைவு மற்றும் விறைப்புத்தன்மை குணப்படுத்தும். மேலும் சில வகையான புற்றுநோய்கள் தீவிரமாவதையும் குறைக்க உதவும்.

​இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது

samayam tamil Tamil News Spot

மூக்கிரட்டை இலைகளின் சாறை எடுத்துவந்தால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைப்பதோடு இன்சுலின் அளவையும் மேம்படுத்த செய்கிறது.

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உணவுக்கு முன் இந்த இலை சாறு 10 மில்லி அளவு குடித்து வரவேண்டும்.

​சிறுநீரக கோளாறுக்கு மூக்கிரட்டை

samayam tamil Tamil News Spot

மூக்கிரட்டை வேர் சாறு (15-20 கிராம் ) கஷாயமாக எடுத்து தினமும் 30-40 மில்லி அளவு குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் வலி குறையும். கணுக்கால் வீக்கம் குறையும்.

சிறுநீர்க்கல் 5 முதல் 9 mm வரை இருந்தால் மூக்கிரட்டை விதை 20 கிராம் அளவு எடுத்து கஷாயம் ஆக்கி 40 மில்லி குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.

மூக்கிரட்டை மற்றும் தனியா விதைகளுடன் நெருஞ்சி ஆகியவற்றால் செய்யப்பட்ட கஷாயம் சிறுநீர் பாதை நோய்த்தொற்று கொண்டிருப்பவர்களை குணப்படுத்தும்.

​கண் கோளாறுகளுக்கு மூக்கிரட்டை

samayam tamil Tamil News Spot

வெண்படல அழற்சி பிரச்சனை கொண்டிருந்தால் மூக்கிரட்டை இலைகளை அரைத்து இலேசாக சாறு எடுத்து கண்களின் மேல் தடவி வந்தால் நோய் குணமாகும்.

மாலைக்கண் நோயை எதிர்த்துப்போராட, பசும்பாலில் இதன் சாறை கலந்து இரவு தூங்கும் முன் குடித்து வர வேண்டும்.

இந்த இலைகளை பேஸ்ட் ஆக்கி கண்களின் மேல் தடவி வந்தால் இமை வீக்கங்கள் குணமாகும்.

​பித்தப்பை கல் வெளியேற்றும் மூக்கிரட்டை

samayam tamil Tamil News Spot

பித்தப்பை கற்கள் வெளியேற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல. மூக்கிரட்டை முழுச்செடியை எடுத்து இளநீர் விட்டு அரைத்து சிறு நெல்லி அளவு எடுத்து வர வேண்டும். அல்லது 2 கிராம் அளவு கணக்கிட்டு எடுத்து வந்தால் பித்தப்பை கற்கள் பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும். இதை சிறுநீரக கல் வெளியேறவும் பயன்படுத்தலாம்.

​கல்லீரலுக்கு நன்மை செய்யும் மூக்கிரட்டை

samayam tamil Tamil News Spot

மூக்கிரட்டை மற்றும் கீழாநெல்லியுடன் சேர்த்து செய்யப்படும் கஷாயம் மஞ்சள் காமாலைக்கு தீர்வாக இருக்கும்.

இந்த மூலிகை எடுப்பதால் உடல் சோர்வு போக்கலாம். முழுச்செடியுடன் இந்த கஷாயத்தை எடுத்து வந்தால் குடல் பிடிப்பை குணப்படுத்தும். மூக்கிரட்டை விதைகள் இரத்த சுத்திகரிப்பாளராக பயன்படுத்தப்படுகின்றன.

​வெள்ளைப்படுதலுக்கு மூக்கிரட்டை

samayam tamil Tamil News Spot

மூக்கிரட்டை வேர் பொடியை அரிசி கழுவிய நீரில் 2 கிராம் அளவு சேர்த்து எடுத்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனையை கட்டுப்படுத்தும்.

மாதவிடாய் நின்ற பிறகு உண்டாகும் அறிகுறிகளை குறைக்க முழுச்செடி கஷாயத்தை எடுத்துகொள்ளலாம்.

​உடல் எடை குறைய மூக்கிரட்டை

samayam tamil Tamil News Spot

வழக்கமாக மூக்கிரட்டை எடுத்து வரும் போது சில மாதங்களில் உடல் எடை குறைவதை நீங்களே உணரலாம்.

பல்வேறு வகையான தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் சரும நோய்களுக்கு மூக்கிரட்டை வேர் அரைத்து தடவி வரலாம்.

Kkudampuli : சமையல்ல புளிக்கு பதிலா குடம்புளி யூஸ் பண்ணுங்க! ஏன்னு டாக்டர் சொல்றதை கேளுங்க!

கணுக்கால் வீக்கம் இருந்தால் மூக்கிரைட்டை இலை பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து கால்களை நனைப்பதன் மூலம் வீக்கம் குறைகிறது.

மூக்கிரட்டை அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும் சுயமாக எடுக்காமல் மருத்துவரின் அறிவுரையோடு எடுப்பது பாதுகாப்பானது. பலன் தரக்கூடியது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *