Share on Social Media


“புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, தேர்தலில் ஓட்டுப்போடுவது என எனது பங்களிப்பு இருக்கும்…” என்கிறார் மு.க.அழகிரி.

மு.க.அழகிரி

தனது ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழகர் கோயில் பகுதிக்கு வந்த மு.க.அழகிரி, செய்தியாளர்களிடம் பேசினார். “சட்டமன்றத் தேர்தலில் தங்களது பங்களிப்பு எப்படியிருக்கும்?” என்ற கேள்விக்கு, “சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, ஓட்டுப்போடுவதும் பங்களிப்புதான்” என்றவரிடம்,

`ரஜினியுடன் கூட்டணிவைப்பீர்களா?’ என்றதற்கு,
“வாய்ப்பு கொடுத்தால் அவருடன் நடிப்பேன்” என்றார் காமெடியாக.

IMG 20201210 WA0083 Tamil News Spot
மு.க.அழகிரி

`ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனைக் கூட்டம் நடத்துவீர்கள்?’ என்ற கேள்விக்கு, “ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்திவருகிறோம்” என்றார்.

`ரஜினி புதிய கட்சி தொடங்கவிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்றதற்கு ,“அவர் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தவுடன் வாழ்த்து தெரிவித்துவிட்டேன்’’ என்றார்.

IMG 20201210 WA0090 Tamil News Spot
மு.க.அழகிரி

`யாருக்கு வாக்களிப்பீர்கள்?’ என்ற கேள்விக்கு , “அதைப் பற்றி சொல்ல முடியாது. ஆனால், வாக்களிப்பேன்” என்று அழகிரி பேசினார்.

மறுபக்கம், `அண்ணன் சீரியஸா பேசுறாரா, காமெடியா பேசுறாரா?’ என்று ஆதரவாளர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *