NTLRG 20201015154017772219 Tamil News Spot
Share on Social Media

மும்பை வீட்டிற்குத் திரும்பிய தமன்னா

15 அக், 2020 – 15:40 IST

எழுத்தின் அளவு:


Tamanna-backs-to-Mumbai-house

கொரோனா தொற்று சினிமா பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. ஏற்கெனவே அமிதாப் உள்ளிட்ட பல இந்திய சினிமா பிரபலங்கள் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

பின்னணிப் பாடகர் எஸ்பிபி மட்டுமே கொரானோ தொற்றில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டாலும் மற்ற சில உடல் உபாதைகளால் மரணம் அடைந்து ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தினார்.

பத்து நாட்களுக்கு முன்பு நடிகை தமன்னா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் அங்கேயே ஓய்வில் இருந்த தமன்னா நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றார்.

வீட்டிற்குச் சென்றதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அவர் வீடு திரும்பியதற்கு அவரது நெருங்கிய தோழியான நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *