Share on Social Media

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்ந்து 52,880 புள்ளிகளில் முடிந்துள்ளன. எஸ்.பி.ஐ பங்கு 1.9 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்கு 1.8 சதவீதமும், எல் அண்ட் டி பங்கு 1.4 சதவீதமும் விலை உயர்ந்து காணப்பட்டன. ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் ஒரு சதவீதத்துக்கு மேல் விலை உயர்ந்து வர்த்தகமாகின. பஜாஜ் ஃபைனான்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ரிலையன்ஸ், பவர்கிரிட், கோட்டக் வங்கி ஆகிய பங்குகளும் விலை உயர்ந்தன. டெக் மகிந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேப், எச்.சி.எல் டெக் உள்ளிட்ட சில நிறுவன பங்குகள் விலை குறைந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து 15,834 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *