Share on Social Media


இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

“11ம் வகுப்பு படிக்கும் எங்கள் மகளுக்கு பள்ளி ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு அமெரிக்கா சென்று தடுப்பூசி போட போதிய கால அவகாசமிருக்கிறது. அமெரிக்காவில் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள 21 நாள்கள் அங்கு தங்கி இருக்கவேண்டியிருக்கிறது.

என் பெற்றோர் சமீபத்தில்தான் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாங்கள் அவர்களுடன் இருக்கவேண்டியிருக்கிறது. அவர்களை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டியிருக்கிறது. எனவே எங்களால் எங்கள் மகளுடன் அமெரிக்காவிற்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது.

மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை உயர்நீதிமன்றம்

என் மகளுடன் அமெரிக்கா சென்று வர பூர்வா முன்வந்துள்ளார். 14 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் அமெரிக்காவிற்கு விமானத்தில் தனியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், எங்கள் மகளை தனியாக அனுப்புவது பாதுகாப்பாக இருக்காது என்று உணர்கிறோம். எனவே பூர்வாவை எங்கள் மகளின் சட்டபூர்வ பாதுகாவலராக நியமித்து உத்தரவிடவேண்டும். இதன் மூலம் சட்டப்படி பூர்வா எங்கள் மகளுடன் அமெரிக்கா சென்று வர முடியும்” என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்” அந்தப் பெற்றோர்.

இம்மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *