Share on Social Media


புதுச்சேரி: புதுச்சேரி, குருவிநத்தத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். முன்னாள் எம்எல்ஏ ராமநாதனின் மகனான இவர், ஏற்கனவே 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இதில் 2001ம் ஆண்டில் குடிசை மாற்று வாரிய தலைவராக இருந்தார். 2006-2011 வரை காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக செயல்பட்டார். திடீரென, என்.ஆர்.காங்கிரசில் இணைந்து 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் நான் அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கிறேன். இதுநாள் வரையிலும் என்னுடைய அரசியல் பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *