Share on Social Media



சென்னை: கிராமங்களில் மருத்துவ சேவை புரிந்து முதுகலை மருத்துவம் படித்தவர்கள் தங்களுக்கான பணியிடங்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்படையாக நடத்தப்படுவதற்கு அரசு மருத்துவர் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனரகத்தில் 605 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நாளை முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் சேவை புரிந்து பின்னர் முதுகலை மருத்துவம் பயின்றவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்கான பணியிடங்களை தேர்வு செய்ய உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக வெளிப்படை தன்மை இல்லாமல் நடைபெற்ற கலந்தாய்வு தற்போது முதல் முறையாக எந்தெந்த துறையில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டு கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள் துறை ரீதியாகவும், அனுபவத்தின் அடிப்படையிலும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *