Share on Social Media


பாகல்கோட்-முதியவர் உடலை தேட சென்ற மகன். மருமகன் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். விஜயபுரா முத்தேபிஹாளின் ஹரனாளா கிராமத்தை சேர்ந்த சிவப்பா அமலுரா என்ற முதியவர், நேற்று முன் தினம் குடிபோதையில் பாகல்கோட் ஹனகுந்தின் தன்னுர் அருகிலுள்ள கிருஷ்ணா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை தேடுவதற்காக, இவரது மகன் யமனப்பா, மருமகன் சரணகவுடா, பரசுராம் என்பவருடன், நேற்று காலை படகில் சென்றனர். அப்போது படகு கவிழ்ந்ததில், மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஹனகுந்த் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *