Share on Social Media

`மருத்துவக் காரணங்கள் vs மூடநம்பிக்கை சர்ச்சை’ – உண்மையில் சிசேரியன்கள் எதற்காக?‘ என்ற தலைப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்துவிட்டு விகடன் வாசகி கலையரசி, “முதல் முறை சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தால், இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆக வாய்ப்பில்லை என்கிறார்களே… அது பற்றித் தகவல் வேண்டும்” எனக் கேட்டிருந்தார்.

கலையரசியின் கேள்விக்கு பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

Pregnancy (Representational Image)

Pregnancy (Representational Image)
Image by Pexels from Pixabay

“முதலில் உங்களுக்கு முதல் பிரசவம் ஏன் சிசேரியனில் முடிந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். Non recurrent Indications என்று சொல்லக்கூடிய திரும்பத் திரும்ப வராத பிரச்னைகளுக்காக சிசேரியன் செய்யப்பட்டிருந்தது என்றால் அடுத்தது உங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வாய்ப்புண்டு.

குழந்தையின் தலை கீழே இல்லாமல், புட்டப்பகுதி கீழே இருப்பது, குழந்தை குறுக்கே இருப்பது போன்ற காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்பட்டிருந்தாலோ, குழந்தை வயிற்றுக்குள் மலம் கழித்துவிட்டாலோ, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, இதயத்துடிப்பில் பிரச்னை இருந்தாலோ, தாய்க்கு பிரசவவலி வராவிட்டாலோ, வலிக்கான மருந்து கொடுத்தும் வராவிட்டாலோ உங்களுக்கு முதல் பிரசவம் சிசேரியனாக செய்யப்பட்டிருந்தால், அடுத்த கர்ப்பத்தில் நீங்கள் சுகப்பிரசவத்துக்கு முயலலாம்.

இரண்டாவது கர்ப்பம் சுகப்பிரசவமாக வேண்டும் என நினைத்தால் சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *